"பாலஜோதிடம்' இதழில் "அகத்தியர் ஜீவநாடி' கட்டுரைகளைப் படித்துவிட்டு நிறைய வாசகர்கள், "பாவ- சாப நிகழ்வுகளை எழுதும் நீங்கள் அதற்கு சரியான பரிகார முறைகளை எழுதவில்லையே' என்று தொலைபேசியில் கேட்கின்றனர்.

பாவ- சாபப் பதிவுகள் பொதுவான ஒரு நிலையில் இருப்பதில்லை. "பெண் சாபம்' என்பது- தாய் சாபம், மனைவி சாபம், மகள் சாபம், சகோதரி சாபம், வாழவந்த மருமகள் சாபம், மருமகளால் வாழ்க்கையிழந்த மாமியார் சாபம், கணவனின் பாதிக்கப்பட்ட சகோதரிகள் சாபம், விதவை சாபம், பாமரப் பெண்கள் சாபம் என பல விதமான முறைகள் உள்ளடங் கியது.

சித்தர்கள், தன்னை நாடி வரும் ஒவ்வொருவரின் வாழ்வில் அனுபவிக்கும் பிரச் சினைகளுக்கு மூலகாரணத்தை ஆராய்ந்து, அது உருவான முறையை அறிந்து, அதற்குரிய நிவர்த்தி முறைகளைக் கூறுவார்கள். பொதுவான பரிகாரங்களைக் கூறமாட்டார்கள்.

ஒரு மருத்துவரிடம் நோயாளி சென்றால், அந்த மருத்துவர், அந்த நோய் எப்படி வந்தது என்பதைதான் முதலில் கண்டறிவார். நோயின் மூலத்தை அறிந்தபின், அது தீர சரியான மருந்து கொடுப்பார். மறுபடியும் அந்த நோயின் பாதிப்பு உண்டாகாமலிருக்க சரியான பத்திய முறைகளைக் கூறுவார். இது நோய்நிவர்த்தி தரும் சரியான முறை. இது போன்றுதான் சித்தர்களும் நிவர்த்தி முறைகளைக் கூறுவார்கள். பெரும்பாலும் "ஜீவநாடி'யில் பலன்காண வருபவர்கள், பலவிதமான பரிகார பூஜைகளைச் செய்து அதில் பலன் கிடைக்காமல், பரிகாரங்களால் தங்கள் பிரச்சினை தீரவில்லை யென்று கூறிக்கொண்டுதான் வருகிறார்கள். பலன் கிடைத் திருந்தால் அவர்கள் "ஜீவநாடி' படிக்க வரவேண்டிய அவசியம் இராது. இதனால்தான் சித்தர்கள் பரிகாரங்களைக் கூறாமல், எளிமையான, பணம் செலவில்லாத நிவர்த்தி முறைகளைக் கூறுகிறார்கள்.

Advertisment

saa

இன்றைய நாளில் வாச கர்கள் பரிகாரம் போன்றவற்றில் விழிப் புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே என் தாழ்மையான அபிப்ராயம்.

அன்றைய தினம் சென்னை அலுவல கத்தில் என்னிடம் "ஜீவநாடி' படிக்க வந்த தம்பதிக்கு நாடியைப் படித்துப் பலன் கூறத்தொடங்கினேன்.

நாடியில் அகத்தியர் தோன்றி, ""என்முன்னே பெரிய பக்திமான்போல் வேடமிட்டு அமர்ந்துள்ளானே, இவன் மகளுக்கு 36 வயது கடந்தும் திருமணம் முடியாமல் தடையாகி வருகிறது. தடை நீங்கி மணம் முடிய வழி கேட்டு வந்துள்ளான். திருமணத் தடைக்குக் காரணம் கூறுகிறேன்.

இவனது 13 வயதில் இவன் தந்தை இறந்துபோனான். இவன் தாயும், மூத்த சகோதரியும் தங்களுக்கிருந்த சிறிய அளவு நிலத்தில் விவசாயம் செய்தும், மேலும் கூலி வேலைக்குச் சென்று, அந்த வருமானத் தைக்கொண்டும் வாழ்ந்து, இவனையும் படிக்கவைத்தார்கள்.

இவனும் படித்து முடித்து ஒரு அரசு உத்தியோகத்தைத் தேடிக்கொண்டான். சம்பாதிக்கத் தொடங்கியவுடன் திருமண மாகாத தன் அக்காவுக்குத் திருமணம் செய்துவைக்காமல், அவளைப் பற்றிக் கவலைப்படாமல், இவன் ஒரு பெண்ணைத் தேடித் திருமணம் செய்துகொண்டான். இவன் மனைவி இவனைவிட மகாபாவி. திருமணம் முடிந்து சில நாட்களில், இருவரும் வேற்றூர் சென்று தனியே வாழத் தொடங்கினார்கள்.

சில மாதங்கள் சென்றபின்பு, இவர்களுக் கிருந்த கொஞ்ச நிலத்தையும் வேறொருவருக்கு விற்றுவிட்டான். தாய்க்கும், சகோதரிக்கும் அன்னத்திற்கு ஆதாரமில்லாமல் போய் விட்டது. அவர்களைப் பசியும் பட்டினி யுமாய் அலையவிட்ட பாவிகள் இவனும், இவன் மனைவியும். தன் மனைவியின் பேச்சைக்கேட்டு அவர்களை அநாதைகள் போல் வாழச் செய்துவிட்டான்.

இவன் சகோதரி, இன்றுவரை திருமணமே செய்துகொள்ளாமல் கூலி வேலை செய்து, தன் தாயைக் காப்பாற்றிவருகிறாள். இவன் தாயும், தன் மகளைப் பார்க்கும்போதெல்லாம், "கணவனுடன் வாழவேண்டிய வயதில் மகளுக்கு வாழ்வில்லாமல் போனதே' என்று கண்ணீர் வடித்து, அப்போது உண்டான கோபத்தால் பெற்ற மகனென்றும் பாராமல் இவன்மீது சாபத்தை வாரிவிட்டார். தாய்விட்ட சாபம், இவன் மகள் வாழ்வில் "அடிவான இடிபோல்' அம்பாய்த் தாக் கிவருகிறது.

இவனது தாயின் சாபம், தன் மகளின் நிலைகண்டு அவள் படும் வேதனை இன்று இவன் மகள் வாழ்வில் சாபத்தீயாய் கொழுந்து விட்டு எரிகிறது. திருமணத்தைத் தடுக்கிறது. இப்போது இவனும் மனைவியும் தன் மகளைப் பார்த்து கலங்கித் தவிக்கி றார்கள்.

இவன் மகளுக்குத் திருமணம் நடைபெற வழி கூறுகிறேன். அதனை கணவன்- மனைவி இருவரும் செய்வார்களா? தாய்- சகோதரியிடம், சாபநிவர்த்தி பெறுவார்களா? யான் கூறியபடி செய்வதாக இருந்தால் வாக்குறுதி தரச்சொல்'' என்றார்.

""ஐயா, அகத்தியர் நாடியில் கூறியதைக் கேட்டீர்களா? அவர் கேட்டபடி வாக்கு தருவீர்களா?''

கணவன், மனைவி இருவரும் சட்டென்று எழுந்து நின்று, ""ஐயா, நாடியில் வந்த அனைத்தும் உண்மைதான். அகத்தியர் என்ன வழி கூறுகிறாரோ, அதனை மாறாமல் அப்படியே செய்வோம்'' என்று கூறினர்.

நாடியில் அகத்தியர், ""இவன் தாயையும் சகோதரியையும் அவர்கள் ஆயுள்வரை தங்களுடன் வைத்துக்கொண்டு, எந்தக் குறையுமில்லாமல் பணிவிடை செய்து காப்பாற்றவேண்டும்.

இந்த மகன் சம்பாதிக்கும் பணத்தை, இனி தாய் அல்லது சகோதரியிடம்தான் தரவேண்டும். அவளிடம் இருந்துதான், இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் தேவைக்குப் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும். யார் சாபம் தந்தார்களோ, அவர்கள்தான் சாபத்திற்குரிய நிவர்த்தியையும் தரமுடியும். ஒருவர் சாபத்தை வேறு எந்த பரிகார பூஜைகளாலும் நிவர்த்திசெய்து தீர்க்கமுடியாது.

பெற்ற மகன் தான் சம்பாதித்த பணத்தைத் தாயிடம் கொண்டுவந்து தரும்போது, அவளை மதித்து வாழும்போது, இவனால் அவள் கடந்தகால வாழ்வில்பட்ட வேதனையும் கோபமும் மறைந்து, மனம் நிறைவடைவாள். அப்போதுதான், அவள் இவனுக்கிட்ட சாபம் நிவர்த்தியாகும்.

இனி இவன் வீட்டில் உள்ளவர்கள், சகோதரி கூறுவதைக்கேட்டு செயல்பட்டு அவளுக்கு மரியாதை தந்து, மனம் மகிழச் செய்யவேண்டும். தாயும் சகோதரியும் சந்தோஷமாகி, இவன் மகளுக்கு ஆசிவழங் கினால் மகளின் திருமணத் தடை நீங்கி திருமணம் நடக்கும்.

இவள் மனைவி, தாயையும் மகனையும் பிரித்துவைத்ததற்கு உண்டான தண்டனையை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்.

அதனால் இவளுக்கு சுவையான உணவை உண்ணமுடியாத நிலைவரும்'' என்று கூறி, அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்து போனார்.

செல்: 99441 13267